கோவையில் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6-ம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவையில் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6-ம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: கோவையில் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6-ம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் ஹரிஹரன் (14). இவர் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று தனது நண்பர் முகமது பயாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். அப்போது, சி.டி.சி மேடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஹரிஹரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ஹரிஹரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த முகமது பயாசை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல அன்னூர் காந்தி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நவ்ஷாத் அலி (30). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து சத்தி ரோட்டில் சென்றார்.

அப்போது, குரும்பப்பாளையம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பைக் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...