கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே விபச்சாரத்திற்கு அழைத்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே விபச்சாரத்திற்கு அழைத்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மதுக்கரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தனபால் (22). இவர் நேற்று காலை சூலூர் பள்ளபாளையம் அருகே நடந்து சென்றார்.
அப்போது, அங்கிருந்த 2 பேர் அவரை வழிமறித்து தங்களிடம் பெண்கள் இருப்பதாகவும் நீங்கள் ஆசைப்பட்டால் உல்லாசமாக இருக்கலாம் என்றனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தனபால் அவரிடம் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.
பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு விபச்சாரத்துக்கு அழைத்து இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிங்காநல்லூரைச் சேர்ந்த 40 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசாரத்துக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த வேல்முருகன் (35), சிங்காநல்லூரை சேர்ந்த செல்வராஜ் (63) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.