கோவை: விவசாய விரோத சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் சிஐடியு இன்ஜினியரிங் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் விரோத சட்டங்கள், விவசாய விரோத சட்டங்களால் விவசாயிகள், மக்களின் வயிற்றில் அடிப்பதும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துதரப்பு பொதுமக்களையும் பாதிப்புக்குள்ளாக்குவது, ஊட்டி மலை ரயிலை தனியார் மயமாக்குவது என மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இன்ஜினியரிங் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.ஜி.சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் கோவை நாடாளுமன்ற உறுபபினர் பி. ஆர்.நடராஜன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
தொழிலாளி வர்க்கத்தின் விரோத அரசான மோடி அரசை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, இன்ஜினியரிங் சங்க செயலாளர் சி.துரைசாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசின் நாசகர சட்டங்களை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.