கோவை: தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க சட்டம் 2019 மூலம் தமிழகத்தின் பாரம்பரிய கால்நடைகளை அழிக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளதாக திமுகவின் மாநில சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி குற்றம்சாட்டியுள்ளார்.

உடுமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி பகுதியில் உள்ள கெடிமேடு, சுந்தரகவுண்டனூர், சூளேஸ்வரன்பட்டி பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டார்.

அவருடன் பேசிய விவசாயிகள் பொள்ளாச்சியில் தென்னை விவசாயத்தில் தற்போது அடுக்கடுக்கான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. நோய் தாக்குதல், விலை வீழ்ச்சி உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த பிறகு கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாரம்பரிய காளைகள் வைத்திருப்போர் பதிவு செய்ய வேண்டும். அவற்றை பராமரிக்காமல் இருந்தால் ரூபாய் 2 லட்சம் அபராதம் விதிப்பதுடன், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், அபராதத்தை கட்ட தவறினால் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இந்த சட்டத்தில் தமிழக அரசு வழி செய்துள்ளது எனவும் இது நமது பாரம்பரிய இன மாடுகளை அழிக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தின் பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்கும் வகை நடவடிக்கைகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். மேலும், பாரம்பரிய மாடுகளுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெர்ரி ரக மாடுகள் மூலம் இனவிருத்தி செய்வதும் தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.