கோவை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்ல அதிமுக வழக்கறிஞர்களும் ஒரு காரணம் என கோவையில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 1996ம் ஆண்டு திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டு, பல கோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்பட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டதாகத் தெரிவித்த அவர், மற்றொரு வழக்கை வேகப்படுத்தவே வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்தார்.
மக்களவை உறுப்பினர் ஆ.ராசா முன்னாள் முதலமைச்சர் குறித்து தரம் தாழ்ந்து பேசுவதாகவும் ஆனால், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கலைஞர் குறித்து தவறாக பேசியது இல்லை என்றார். 2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்து உள்ள நிலையில், வழக்கறிஞர் என்ற முறையில் நேர்மையாக போய் வாதாடாமல் சந்து பொந்துகளை ஏன் தேடுகிறார் என கேள்வி எழுப்பினார்.
திமுகவில் இருந்து சென்ற செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் உள்ள நிலையில், அவர் திமுக கட்சிக்கு சென்றதால் உத்தமர் ஆகிவிட்டாரா என கேள்வி எழுப்பிய அவர், ஸ்டாலின் மீது உள்ள கோபம் காரணமாக அவரை தெருவில் நிற்க வைக்க முயல்வதாகவும் தெரிவித்தார்.
பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முக்கிய குற்றவாளி டி.டி.வி தினகரன் எனவும் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட என்ன காரணம் எனவும் தினகரனுக்கும் திமுகவிற்கும் என்ன உறவு என்றார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தவறாக பேசினால் எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றவர், ஆ.ராசாவிற்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துகள் வந்தது எனவும் கேள்வி எழுப்பினார். அரசியல் நாகரீகம் இன்றி யார் பேசினாலும் தான் அதை ஏற்று கொள்ள மாட்டேன் என்றவர், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்ல அதிமுக வழக்கறிஞர்களும் ஒரு காரணம் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.