கோவை: கோவை ஹோப்காலேஜ் அருகே செயல்பட்டு வரும் டைடில் பார்க்கில் தகவல் தொழில்நுட்ப பூங்கா புதிய கட்டிடத்திற்கு, காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
கோவை: கோவை ஹோப்காலேஜ் அருகே செயல்பட்டு வரும் டைடில் பார்க்கில் தகவல் தொழில்நுட்ப பூங்கா புதிய கட்டிடத்திற்கு, காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

மென்பொருள் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வரும், டைடில் பார்க் வளாகத்தில் 2.42 ஏக்கர் பரப்பளவில், ரூ.114 கோடியே 16 லட்சத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் இன்று புதிதாக அமைய உள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, முக்கிய அதிகாரிகள் மற்றும் டைடில் பார்க் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.