கோவை: மது குடிக்க பணம் கேட்டு காதல் கணவர் தொடர்ந்து தகராறு செய்ததால், திருமணம் செய்து கொண்ட ஐந்தே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோவை வடக்கு ஆர் டி ஒ விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 24), கூலித்தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த லோகநாயகி (19), காதலித்து வந்தனர். இதற்கு அவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர்கள் இரண்டு பேரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், குருமூர்த்தியின் உறவினர் லோகநாயகியின் தாய் சாந்திக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் விஷம் குடித்து விட்டார், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம், என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உறவினர்களுடன் கோவைக்கு வந்தனர்.
இதற்கிடையே, துடியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு லோகநாயகி சிகிச்சை பெற்று வந்தார். அவரை, சாந்தி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தனர். இதையடுத்து, லோகநாயகி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குருமூர்த்தி மது குடிக்க பணம் கேட்டு லோகநாயகியை அடித்து துன்புறுத்தியதாக தெரியவந்துள்ளது. இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், காதல் கணவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லோகநாயகி திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆவதால், அவருடைய சாவு குறித்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.