முகம் தெரியாவிட்டாலும், தன்னலமற்ற சேவைகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மறைந்த சாந்தி சோஷியல் சர்வீஸ் (SSS) நிறுவர் சுப்ரமணியம்..!

கோவை: தன்னலமற்ற சமூக சேவைகள் மூலம் கோவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, சாந்தி சோசியல் (SSS) நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார்.

கோவை: தன்னலமற்ற சமூக சேவைகள் மூலம் கோவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, சாந்தி சோசியல் (SSS) நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார்.

லேத் இயந்தரத்தை மூலதனமாக வைத்து உருவாகியது தான் சாந்தி கியர்ஸ்..! 

கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குனரும், சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78).தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் 1972 ஆம் ஆண்டு ஒரு லேத் இயந்தரத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு கியர் வீல்கள் தயாரிக்க ஆரம்பித்தார்.

இஸ்ரோ நிருவனதிற்கு உதிரி பாகங்கள்..! 

ஆரம்ப கால கட்டத்தில், ஜவுளி இயந்திரங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்த, சுப்ரமணியம், பின்னர் தொழிலை விரிவாக்கம் செய்ய அவர் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியில் ஈடுபட்டார். இஸ்ரோ நிருவனதிற்க்கும் இவரது தயாரிப்புகள் கொடுக்கபட்டன.

சாந்தி சோசியல் சர்வீஸ் 

கடந்த சில வருடங்களுக்கு முன் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சாந்தி கியர்ஸ் விற்கபட்ட நிலையில் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கி அந்த அமைப்பின் அறங்காவலராக அவரே இருந்து வந்தார். 

தினமும் 300 பேருக்கு இலவச உணவு

இந்த அமைப்பின் மூலம், லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் சாந்தி சோசியல் சர்வீஸ் வளாகத்தில் தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது. 

மேலும், 30 ரூபாயில் மதிய உணவு, குறைந்த விலைவில் காலை சிற்றுண்டி என தரமான உணவு வழங்கப்படுவதால், தினமும் அங்கு ஏராளமானோர் வந்து உண்பது வழக்கம். மேலும், அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் வெறும் ரூபாய் 30, மட்டுமே, மருந்துகளில் 30% தள்ளுபடி, குறைந்த பணத்தில் பரிசோதனை என பல்வேறு சலுகைகைகள் உள்ள காரணமாக எப்போதும் மக்கள் கூட்டமாகவே காணப்படும் இடம் தான் அவர் நடத்தி வந்த சாந்தி சோஷியல் சர்விஸ். 

அவர் நடத்தி சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில் பஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலைக்கே அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்வதால், அங்கும் வாகனதிற்க்கு எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள் எப்போதும் காணப்படுவது வழக்கம். இதன், எதிர்புறம் சாந்தி சோசியல் சர்வீஸ் இலவச மின்மயானமும் செயல்பட்டு வருகின்றது. 

தன்னை அடையாளப்படுத்தி கொள்ள கூடாது என ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம். கடந்த ஒரு மாததிற்க்கு முன் 78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். 

இறுதிவரை மக்களுக்காக, தன்னலமற்ற சேவைகளை எந்த வித எதிர் பலனும், விளம்பரமும் இன்றி மனதார செய்து வந்த அவர் தான் உண்மையான வள்ளல் என்று மக்கள் போற்றி வருகின்றனர். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...