கோவை: கோவையில் ரயில் நிற்பதற்கு முன் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் நசுங்கி இறந்த சம்பவம் குறித்து இரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசாவை சேர்ந்தவர் பாரத் சந்திரி பெகாரா (வயது 37). இவர் கோவை தொப்பம்பட்டியில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் சி.ஆர்.பி.எப் முகாமில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 15 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, தனது சொந்த ஊரான ஒடிசாவிற்கு சென்றார்.
பின்னர், விடுமுறை முடிந்து நேற்று பணியில் சேர்வதற்காக கோவை திரும்பினார். அதற்காக ஒடிசாவில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து கோவை சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார். அவர் வந்த ரயில் வடகோவை அருகே வந்த போது, அவர் இறங்குவதற்காக தனது உடமைகளை எடுத்துக்கொண்டு ரயிலின் கதவருகே வந்து நின்றுள்ளார்.
அப்போது, ரயில் நிலையம் வந்ததும், ரயில் நிற்பதற்கு முன்பு அவசரப்பட்டு அவர் பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்க முயற்சி செய்துள்ளார். இதில், பாரத் சந்திரி பெகாரா நிலை தடுமாறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் மாட்டிக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பயணிகள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.