கோவை: கோவையில் கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைத்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி 56 வயதுடைய பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த பெண், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரியின் மனைவி ஆவார்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள சின்ன வதம்பச்சேரியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரியின் மனைவியான ஈஸ்வரி (வயது 56), நேற்று காலை தனது வீட்டில் கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைத்துக் கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
அதில், உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஈஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த எதிர்பாரத விபத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.