கோவை: கோவையில் நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பி.ஆர்.எஸ் போலீஸ் பயிற்சி மைதானத்தில், கடந்த இரண்டு மாதங்களாக மூதாட்டிகள் இரண்டு பேரிடம் நகை பறிப்பு குற்றங்கள் நடைபெற்றுள்ளது.

இதில், தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மத்திய பகுதி உதவி கமிஷனர் பெரியசாமி மேற்பார்வையில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு தொடர்பாக திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ஆர். முனீஸ்வரன் (வயது 34), என்பது தெரியவந்தது. அவர் கோவை போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர்.
பிறகு அவருடைய நடத்தை காரணமாக போலீஸ் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் அவர் கோவை வீரகேரளம் பகுதியில் தங்கி நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முனீஸ்வரனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.