கோவை: கோவையில் தொடர் கொள்ளையை தடுக்க கோவை மாநகரில் புதிய போலீஸ் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் தொடர் கொள்ளையை தடுக்க மாநகரில் புதிய போலீஸ் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர் பகுதிகளான சிங்காநல்லூர், பீளமேடு, சின்னவேடம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தனர். இந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தொடர் கொள்ளைகளை தடுக்கும் விதமாக மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை காவல் ஆணையர் ஸ்டாலின் மேற்பார்வையில் 30 போலீசார் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆயுதப் படையைச் சேர்ந்த 10 போலீசார் வீதம் 30 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூட்டப்பட்ட வீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க உள்ளனர். இது தவிர இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றித் திரிந்தாலும் அல்லது வாகனங்களில் சென்றால் அவர்களைத் தடுத்து விசாரணை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.