பொள்ளாச்சி - போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

கோவை: கோவையில் பொள்ளாச்சி - போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.


கோவை: கோவையில் பொள்ளாச்சி - போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல், பாலக்காடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பாலகாட்டில் இருந்து சென்னைக்கு பொள்ளாச்சி வழியாக ஒரு பயணிகள் ரயில் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரை தென்னக ரயில்வே சார்பில் பொள்ளாச்சி - கோவை மற்றும் திண்டுக்கல் - பாலக்காடு இடையே இயங்கும் ரயில்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி வழியாக இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தற்போது வேக பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று உதவி செயற்பொறியாளர் கண்ணதாசன் தலைமையில் பொள்ளாச்சி போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் 3 பெட்டிகளுடன் நடைபெற்றது.

இதனிடையே, சோதனை ஓட்டத்தில் தற்போது சேகரிக்கப்பட்ட விவரங்கள் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...