கோவை: மு.க.ஸ்டாலின் எப்போதும் முதலமைச்சராக முடியாது என திமுகவினரே கூறி வருவதாக கோவையில் அதிமுகவில் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், அதிமுகவின் புறநகர் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக கட்சி நிர்வாகிகளிடையே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், கோவையில் மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் பங்கேற்கும் கூட்டத்திற்கு 200 ரூபாய் கொடுத்து கூட்டம் சேர்த்து வருகின்றனர் என்றார்.
அதேபோல, பிரச்சாரத்தில் கனிமொழி பேசும் போது கோவையில் மேம்பால கட்டுமான பணிகள் மெதுவாக நடைபெறுவதாக கூறுகிறார். கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலம் ஆகும் என்பது கூட தெரியாமல் கனிமொழி பேசி வருகிறார் எனவும் கோவையில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
கோவையின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பால கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.
ஸ்டாலின் தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் எழுதிக் கொடுத்ததை கூட தவறாக பேசி வருவதாகவும் திமுக ஆட்சியில் இருந்த போது மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றார். ஸ்டாலின் திருப்பூரில் பேசும்போது 1971ம் ஆண்டு கருணாநிதி அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதாக தவறான தகவலைக் கூறி சென்றுள்ளார் எனவும் ஸ்டாலின் எப்போதும் முதலமைச்சராக முடியாது என திமுகவினரை தெரிவித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், புயல் பாதித்த மாவட்டங்களில் நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்து தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எனவும் இந்த அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மக்களுக்கு கொடுத்து உள்ளதால் அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பொதுமக்கள் இடையே வாக்கு சேகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என தெரிவித்த அமைச்சர் வேலுமணி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.