முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே வேளாண் திருத்த சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார் - கனிமொழி எம்பி குற்றம்சாட்டு

கோவை: முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேளாண் திருத்த சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேளாண் திருத்த சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி எப்போது வருமென மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் என்றார். நொய்யல் ஆறு மிகவும் மாசுபட்டுள்ளது எனவும் நொய்யல் புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் என்ன பணிகள் நடைபெறுகிறது என யாருக்கும் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அதிமுக ஆட்சி திறமையில்லாத ஆட்சி எனவும் அவர் கூறினார். கோவை மாவட்டத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை என்றவர், அதிமுகவினருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், தேவையற்ற தனிப்பட்ட விமர்சனங்கள் ஆரோக்கியமானது அல்ல எனவும் அதனை துவக்கி வைத்தது அதிமுக என்றவர், பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேளாண் திருத்த சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார் எனவும் வேளாண்மை திருத்தச் சட்டங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது என தெரிவித்தார்.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது எனவும் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருவது பற்றி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று கூறிய அவர், தேமுதிக திமுக கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்கு இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத நிலையில், அவர் குறித்து கருத்து தெரிவிக்க தேவையில்லை எனவும் அழகிரி கட்சி ஆரம்பிப்பது குறித்து கேள்விக்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என அவர் பதிலளித்தார். அழகிரி புது கட்சி துவங்குவது குறித்து பதிலளிக்க வேண்டியது இல்லை எனவும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதை எதுவும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கை துண்டிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவின் எச்சரிக்கை குறித்த கேள்விக்கு, அராஜகத்தை தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் அனைத்தையும் தனியார் மயமாக்க வேண்டுமென்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது எனவும் கூறினார்.

மேலும், ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் பெண்களுக்கு வழங்குவது குறித்து துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கருத்திற்கு அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதுகுறித்து முடிவெடுக்கட்டும் என்றார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை குறித்த மாறுபட்ட நிலைப்பாட்டினால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும் கனிமொழி தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...