பொள்ளாச்சி: வருவாய் துறை சார்பில், பொள்ளாச்சியில் வாக்காளர் சேர்க்கை மற்றும் 100 சதவிகித வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் சார் ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், நடைபெறும் இந்த முகாமில், புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்தவர்களின் பெயரை நீக்குவது மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்படும் என்று வருவாய்த் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 100% வாக்களிப்பு மற்றும் சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று சார் ஆட்சியர் வைத்திநாதன் தலைமையில், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் கராத்தே, யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், இது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள், பேருந்து நிலையங்களில் ஒட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.