பொள்ளாச்சி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொலிக் காட்சி மூலமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் உரையாற்றினார்.

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு, எவ்வாறு பணியாற்ற வேண்டும், என்று அறிவுரை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில், வால்பாறை - நெடுங்குன்று வன கிராமத்தை சேர்ந்த எம்.ஏ.தமிழ் 2ம் ஆண்டு படிக்கும் பழங்குடியினர் மாணவி சரண்யாவுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின், துணை தலைவர் டாக்டர் ஆர் மகேந்திரன் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை மக்கள் நீதி மையம் வரவேற்கிறது. மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் மாற்றுக் கட்சியை சேர்ந்த நேர்மையான அரசியல்வாதிகளுக்ககு, மக்கள் நீதி மய்யத்தில் இடம் உண்டு, என்றார்.
மேலும், நடைபெற்று வரும் ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்த நல்லவர்கள் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்த அவர், கட்சியின் கூட்டணி குறித்து தலைமை, தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். அப்போது, அவர் முதல் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தேர்தல் பரப்புரையை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்க உள்ளதாகும், தொடர்ந்து 20 நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும், என்றும் அவர் தெரிவித்தார்.