கோவையில் சிறுதுளி சார்பாக மறைந்த பாடகர் எஸ்.பி. பிக்கு இசை வனம்; நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்

கோவை: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக கோவை பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி சார்பில் 74 மரங்கள் நடவு செய்யும் இசை வனம் அமைக்கும் பணி இன்று நடைபெற்றது.



கோவை: கோவை சிறுதுளி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பேரூர் செட்டிபாளையம் பஞ்சாயதிற்க்கு சொந்தமான 1.8 ஏக்கர் பரப்பளவில் மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவாக இசை வனம் இன்று துவங்கப்பட்டது.



எஸ்.பி.பியின் வயதை நினைவு கூறும் வகையில் ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேம்பு, சில்வர் ஓக், வேங்கை, தேக்கு என இசை கருவிகள் தயாரிக்கபடும் 74 வகையான மரங்கள் இசை குறிப்பு வடிவத்தில் நடப்பட உள்ளது. இதில் பிரபல திரைபட நகைச்சுவை நடிகர் விவேக் கலந்து கொண்டு இசை வனத்தை, சிறுதுளி அமைப்பின் நிறுவர், திருமதி வனிதா மோகன் தலைமையில் தொடங்கி வைத்தார். எம் எல் ஏ எட்டிமடை சண்முகம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் மற்றும் தன்னாரவளர்கள் பங்கேற்றனர். 



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியதிற்க்கு முதன் முறையாக இசை வனம் கோவையில் அமைக்கபட்டு உள்ளது எனவும் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் அனைவரையும் தனது குரலால் ஈர்த்தவர் என புகழாரம் சூட்டினார். இசை வனத்தில் இசை கருவிகள் செய்ய கூடிய மரங்கள் மற்றும் விருச்சக மரங்கள் நடபட உள்ளதை பாராட்டினார்.



மறைந்த பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நினைவாக முதல் முறையாக கோவையில் இசை வனம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தும் மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அவர் உடல் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார், என தெரிவித்தார்.

சமீபத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் குறித்து கருத்து தெரிவித்த, நடிகர் விவேக், நடிகர் நடிகைகள் மட்டுமல்ல யாருமே தற்கொலை செய்ய கூடாது. தற்கொலை கோழைகள் எடுக்கும் முடிவு. பிரச்சனைகளை, நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், என்றார். 

மேலும்  ஓ.டி.டி தளங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஓ.டி.டி தளங்கள் தீடீர் மழை போல, வீட்டில் எப்போதும் படங்களை  பார்க்க விரும்ப மாட்டார்கள். மக்கள் திரையரங்கு செல்வதை தான் விரும்பவார்கள், என தெரிவித்தார். 

ரஜினி, கமல் அரசியல் வருகை தருவதை பொதுமக்களின் ஒருவனாக இருந்து நான்பார்ப்பேன்.  மக்கள் விரும்புவர்களுக்கே ஆதரவு, என தெரிவித்தார். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...