மாணவர்களின் கவனத்திற்கு..! பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கோவை: பி.எட் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.


கோவை: பி.எட் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி.எட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் கடந்த 4ம் தேதி துவங்கியது.

எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவு மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய் செலுத்த வேண்டும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

அதேபோல, சான்றிதழ்களை www.tngasaedu.in இணைய முகவரியில் பதிவேற்ற வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் O44- 22351014, 2235115, 2827 8791 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெறலாம்.

இந்த நிலையில், விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளதால் ஆசிரியர் படிப்புக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...