கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் பிறர், விதிகளை மீறி கடை வைத்திருப்பதாக, மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அடிவாரத்திலிருந்து மலை மேல் செல்வதற்கு, படிக்கட்டுகள் வழியாகவும், பேருந்து வழியாகவும், பக்தர்கள் சென்று வருகின்றனர். கோவில் அருகே சுமார் 63 மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் படிக்கட்டுகளில் கடைகள் அமைக்க அரசு அனுமதி அளித்தது.
ஆனால், மலைவாழ் மக்களை தவிர மற்றவர்கள் கடை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது படிக்கட்டுகளில் மலைவாழ் மக்களை தவிர மற்றவர்களும் கடை வைத்துள்ளனர், என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து புகார் தெரிவிக்கும் மலைவாழ் மக்கள், வழி நெடுக கடைகள் வைத்துள்ளதால், போக்குவரத்து இடையூறு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதனால், வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், உடனடியாக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.