கோவை: கோவையின் தொழில் அமைப்புகளின் கூட்டு குழு சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் இன்று நடைபெற்றது. அப்போது, கூட்டாக செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் பேசுகையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, தட்டுபாடு, இறக்குமதி வரி ரத்து, ஜி எஸ் டி வரி செலுத்த கால அவகாசம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சரகத்தை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கோவை: கோவையின் தொழில் அமைப்புகளின் கூட்டு குழு சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் இன்று நடைபெற்றது. அப்போது, கூட்டாக செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் பேசுகையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, தட்டுபாடு, இறக்குமதி வரி ரத்து, ஜி எஸ் டி வரி செலுத்த கால அவகாசம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சரகத்தை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் பேசுகையில்:
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தொழிற்சாலைகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் பம்ப், மோட்டார் போன்ற பல்வேறு துறைகளில் உற்பத்தி பொருட்களின் தயாரிப்புக்கு உதவும் அடிப்படை மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஸ்டீல், பவுண்டரி பொருட்களான கோக், பிக் அயர்ன், காஸ்ட் அயர்ன், ஸ்டீல் ஸ்கிராப்ஸ், போரிங்ஸ், சிஆர் தகடுகள், தாமிரம், பித்தளை, அமின் காஸ், அலுமினியம் ஆகியவற்றின் விலை தற்போது 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த ஸ்டீல் போன்ற மூலப்பொருட்கள் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். உற்பத்தி பொருளின் மொத்த விலையில் இந்த விலை உயர்வின் தாக்கம் 20 சதவீதம் அதிகமாக உள்ளது. இரும்புதாது, ஸ்டீல், ஸ்கிராப், பிவிசி போன்றவற்றைக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை இடைத்தரகர்கள் விலை உயர்த்துவதற்கு வாய்ப்பு அளிக்கும். இந்த சூழ்நிலையை, சமாளிப்பதற்கு நடப்பு மூலதனத்தில் உயர்வு ஏற்படுவதோடு கூடுதலாக 40 சதவீதம் மூலதனமும் தேவைப்படுகிறது.
கோவையில் 2015 ஆம் ஆண்டு மூடப்பட்ட செயில் மூலப்பொருட்கள் கிடங்கை மீண்டும் திறக்க வேண்டும். செயில் மூலப்பொருட்கள் கிடங்கு இல்லாததால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தனியாரிடம் மூலப்பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய, நிலைமையை சமாளிக்க உற்பத்தி பொருட்களுக்கு தேவையான பொருட்களின் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்.
இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தொழில்துறை கூட்டமைப்பினர் மத்திய நிதி மற்றும் ஸ்டீல் துறை அமைச்சர்களை சந்திக்க உள்ளோம், இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த சந்திப்பின் போது கோப்மா தலைவர் மணிராஜ், கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, காட்மா சிவக்குமார், சீமா தலைவர் கே.வி கார்த்திக் மற்றும் கோ இந்தியா, இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ், டாப்மா, லாகு உத்யோக் பாரத் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.