கோவை: கோவை வடவள்ளி கருப்பசாமி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் விஜய் (32), இவர் பொம்மனாம்பாளையம் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று, பிற்பகல் தனது மோட்டார் சைக்கிளில் இன்சூரன்ஸ் செய்வதற்காக காந்திபுரம் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து மீண்டும் அவர் வேலை செய்யும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வடவள்ளி - தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சென்றபோது, அவரது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அந்த வழியாக நடந்து சென்ற நவாவூர் பிரிவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஆறுமுகசாமி (57,) என்பவர் மீது மோதியது.
இதில், ஆறுமுகசாமியும், மோட்டார் சைக்கிளில் வந்த விஜய்யும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
ஆனால், செல்லும் வழியிலேயே ஆறுமுகசாமி பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயத்துடன் போராடிய விஜய், கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் இறந்த விஜய்க்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.