கோவை: சமீபத்தில், கோவையில் தொடரும் திருட்டு சம்பவத்தால் பொது மக்கள் பீதியடைந்து வருகின்றனர். பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம், வழிப்பறி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

நேற்று, கோவை சின்னவேடம்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), என்பவர் இரு நாட்களுக்கு முன்தினம் தனது உறவினர் ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு சென்று விட்டார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர், உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை, வெள்ளி குத்து விளக்கு, 50 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரியவந்துள்ளத. இது குறித்து, விஜயகுமார் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீஸார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து வழக்கு, திருட்டு வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.