கோவை: கோவையில் வங்கிக்குச் சென்ற ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திடீர் மாயமான சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை கணபதி, அத்திப்பாளையம் பிரிவு, அருகே உள்ள விமானப்படை வீரர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமாச்சாரி நாராயணன்
(60) ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. நேற்று முன்தினம், இவர் தனது மனைவியிடம் வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்பதால், அவரது மனைவி அக்கம்பக்கத்தில் தேடி வந்துள்ளார். இருந்தும், அவர் கிடைக்காததால், இதுகுறித்து அவரது மனைவி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. மாயமான ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியை தேடி வருகிறார்கள்.