கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகரில் உள்ள ஒரு பேக்கரி அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று ரகசியமாக, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கண்ணப்பன் நகரைச் சேர்ந்த ஜாபர் ஷெரிப் (25), அஜித்குமார் (21), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு கிலோ கஞ்சா ரூபாய் 150 பணம் ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.