திருப்பூர்: திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக 108 அவசர அழைப்புக்கு மர்ம ஆசாமி ஒருவர் இரவு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதைதொடர்ந்து, அங்கு வந்த மாநகர் காவல் இணை ஆணையர், சுரேஷ்குமார் தலைமையில் இரயில்வே போலிசார், மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு போலீசார் என சுமார் 50 மேற்பட்ட போலிசார் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு இரவு 11 மணி அளவில் விரைந்து வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை நள்ளிரவு 12 மணியையும் தாண்டி நடந்தது.

ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு மூட்டைகள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் சோதனை செய்ததில், எந்த வெடி பொருளும் கிடைக்கபெறவில்லை. சோதனையின் முடிவில், அந்த மர்ம நபரின் அழைப்பு புரளி என தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தேனியை சேர்ந்த ஆனந்த் என்பவர் மது போதையில் போனில், வெடிகுண்டு குறித்து எச்சரித்தது. தெரிய வந்தது. பின்னர், ஆனந்தை கைது செய்த திருப்பூர் தெற்கு போலீசார், அவரை விசாரித்து வருகின்றனர்.