கோவையில் திருமணத்துக்கு ஜவுளிக் எடுக்க சென்ற புதுமணப்பெண் மாயம்...! காட்டூர் போலீசார் விசாரணை

கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் சேர்ந்த 23, வயது இளம்பெண், பி.காம், படித்து முடித்துவிட்டு வங்கி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்தார்.


கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் சேர்ந்த 23, வயது இளம்பெண், பி.காம், படித்து முடித்துவிட்டு வங்கி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணம் செய்வது என அவரது பெற்றோர்கள் முடிவு செய்து சமீபத்தில், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். இந்த மாத இறுதியில் திருமணம் தேதி குறிக்கப்பட்டு இருந்ததால், சம்பவத்தன்று திருமணத்திற்கு தேவையான துணிகள் எடுக்க புது மணப்பெண்ணை அவரது பெற்றோர் காந்திபுரத்தில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, பட்டு புடவைகளை பார்த்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் தனது பெற்றோரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. ஆதலால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால், அவர்களது பெண்ணை காணவில்லை என்பதால், பெற்றோர் காட்டூர் காவல் நிலையத்தில் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் காணாமல் போனதை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், திருமணம் பிடிக்காததால் அப்பெண் வீட்டை விட்டு வெளியேறினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க வந்த திருமணம் நிச்சயமான மணப்பெண் திடீரென மாயமானதாக சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...