கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் திட்டம் தொடர்பாக வெள்ளலூர் குப்பைகிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை டிரோன் கேமரா மூலம் அளவிடும் பணி கடந்த வாரம் துவங்கி 3 நாட்கள் வரை நடைபெற்றது. தற்போது, இந்த பணிகள் முடிந்து ஆய்வு அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு தரம்பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது.
இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது.இந்த திட்டத்தை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது. இதற்காக வெள்ளலூர் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள் அளவு எவ்வளவு, என்ன மாதிரியான குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளன என்பது குறித்து அளவீடு செய்ய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் டிரோன் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுன் இங்கு தேங்கியுள்ள குப்பைகளை அளவீடும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, இந்த பணிகள் முடிவடைந்துள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெள்ளலூர் குப்பை கிடங்கில் டிரோன் கேமரா மூலம் குப்பையின் அளவை சர்வே செய்யும் பணி முடிவடைந்தது. தற்போது, அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,’’ என்றார்.