பணக்காரர்களுக்கான பயணமா? நீலகிரி மலை இரயில் கட்டணம் பலமடங்கு உயர்வு - அரசின் முத்திரையை மறைத்து இயக்கியதால் சர்ச்சை!

சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மலை, தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மலை, தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில், அதிக கட்டணம் மற்றும் வரலாற்று பின்னணி கொண்ட நீலகிரி மலை ரயிலின் லோகோ (logo) பெயரை மறைத்து, தனியார் நிறுவனத்தின் பெயர் பதியப்பட்டுள்ளது என்று மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்த நிலையில், நீலகிரி இரயில் பணக்காரர்களுக்கான பயணமா? என்ற கேள்வியை தந்தை திராவிட கழகத்தினர் எழுப்பியுள்ளனர். நீலகிரி மலை இரயிலை வாடகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனம், பயண கட்டணத்தைபல மடங்காக உயர்த்தி இயக்கப்பட்டதும், நீலகிரி மலை ரயில் என்ற லோகோ அடங்கிய அரசின் முத்திரை மறைக்கப்பட்டு தனியார் நிறுவனத்தின் பெயரான TN43 என்று மாற்றப்பட்டு இயக்கப்பட்டதை, கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தனியார் ரயிலை முற்றுகைப் போராட்டம் நடத்த இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் மலை ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தனியார் நிறுவனம் மலை ரயிலை மேட்டுப்பாளையம் முதல் உதகைக்கு ரூபாய் 2 லட்சத்து 85 ஆயிரம் எனவும் உதகையில் இருந்து மேட்டுப் பாளையத்திற்கு ரூபாய் 2 லட்சத்து 85 ஆயிரம் வீதம் மொத்தம் 4 லட்சத்து 90 ஆயிரம் கட்டி வாடகைக்கு எடுத்தது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்த இரயிலை இயக்குவதற்கு முடிவு செய்து கடந்த வாரம் இயக்கிய தனியார் நிறுவனம், வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் வரை மாதத்திற்கு மூன்று முறை இந்த சேவை இயக்கப்படுவதாகவும், மார்ச் 15 முதல் ஜூன் 15 வரை தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் மலை ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 



மேலும், இந்த ரயிலில் பயணிக்க மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ஒரு நபருக்கு 3000 ரூபாய் வீதம் 160 நபர்களிடம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, உதகை முதல் மேட்டுப்பாளையம் செல்பவர்களிடம் இருந்தும் இதே தொகை வசூலிக்கப்பட்டது எனவும், ஏறக்குறைய 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூலித்து விட்டு, தெற்கு ரயில்வேக்கு வெறும் 4 லட்சத்து 90 ஆயிரம் மட்டும் கட்டணமாக செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நடராஜ் கூறியதாவது:-

வழக்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கும், உதகையில் இருந்து மேட்டுப் பாளையத்திற்கும் முதல் வகுப்பு ரூபாய் 475 கட்டணத்திலும், இரண்டாம் வகுப்பு ரூபாய் 110 என்ற கட்டணத்தில் மலை ரயில் இயக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ரயில் மத்திய அரசின் உத்தரவு கிடைத்ததும் வழக்கம்போல், இயக்கப்படும் என்றும், நீலகிரி மலை ரயிலுக்கென்று சுமார் 50 கோச்சுகள் உள்ளதால், தனியாருக்கும் அரசு இயக்கும் ரயில் பெட்டிகளுக்கும் எந்த மாற்றமும் இருக்காது, என்றார்.

சீசன் காலத்தில் சிறப்பு மலை ரயில் கூடுதலாக இயக்கப்படும் போது, அதற்கு கட்டணமாக ரயில்வே துறை ரூபாய் 1,500 என்று கட்டணம் நிர்ணயித்து கடந்த காலங்களில் இயக்கியது. தற்போது, தனியாரின் இந்த கட்டண உயர்வு மிகவும் கூடுதலாக இருப்பதாகவும், சீசன் காலத்தில் இந்த கட்டணம் கட்டுப்பாடில்லாமல் வசூலித்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைதான் உள்ளதாக, தெரிவித்தார்.

இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

வழக்கமாக குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் மலை ரயில்கள் ரத்து செய்யப்படாது என்றும் இது தனியார் வசம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக கூடுதலாக இயக்க இந்த சிறப்பு மலைரயில் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மத்திய ரயில்வே துறையின் அனுமதி கிடைத்ததும் வழக்கமாக குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் ரயில் சேவை துவங்கும் என்றும், அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் மக்களின் உணர்வுகளில் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் வெகுவாக கவர்ந்துள்ள இந்த மலை ரயில் பயணம் ஏழை மக்களின் பகல் கனவாக மாறிவிடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் நலன் கருதி மலைரயில் இயக்கம் நிறுத்தப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்துவிட்டு, தற்போது தனியார் மூலம் இயக்கும் போது கொரோனா பரவாதா? என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இரண்டு இடங்களில் மட்டும் நிறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியாருக்கு 11 இடங்களில் வனப்பகுதிகளில் ரயிலை நிறுத்தி இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க அனுமதி வழங்கியிருப்பதன் மூலம் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதா? உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுடன் தனியார் நிறுவனம் இந்த மலை ரயிலை இயக்குவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...