நீலகிரி: கோத்தகிரி அருகே உணவுக்காக குரங்கை வேட்டையாட துரத்திச் சென்ற சிறுத்தையும், குரங்கும் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன.

கோத்தகிரி வனச்சரகம், சோலூர்மட்டம் பிரிவு கீழ் கோத்தகிரி காவல் பகுதிக்குட்பட்ட பொம்மன் பகுதியிலுள்ள, தனியார் தேயிலைத்தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, தகவலின் பேரில் கோத்தகிரி வனச்சரகர் செல்வகுமார், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அந்த கிணற்றுக்குள் சிறுத்தையுடன் குரங்கும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது.

பின்னர், வனத்துறையினர் கிணற்றுக்குள் கயிறு வலைகளை போட்டு இறந்துபோன சிறுத்தை மற்றும் குரங்கின் உடல்களை மீட்டனர்.
இதனையடுத்து கோத்தகிரி கால்நடை மருத்துவர் ராஜன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, இறந்துபோன சிறுத்தையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அதே பகுதியில் எரியூட்டப்பட்டது. மேலும், இறந்து போன குரங்கின் உடலும் அதே பகுதியில் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், குரங்கை வேட்டையாடுவதற்காக துரத்திக்கொண்டு வந்த சிறுத்தையும், தப்பிச்செல்ல முயன்ற குரங்கும் கம்பி வலைகளால் மூடப்பட்டிருந்த கிணற்றில் வலைகளை பிய்த்து கொண்டு தவறி விழுந்து இறந்திருக்கக் கூடும் எனவும், இறந்துபோன சிறுத்தை 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
மசக்கல் கிராமப் பகுதியில் இதேபோல சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் தவறிவிழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.