வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கைது!

திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 14வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது, ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனை தொடர்ந்து, ரயில் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...