பொள்ளாச்சி: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தை, திமுக பாராளுமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, கோவை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளார்.

இன்று பொள்ளாச்சியில், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட கனிமொழி, திமுக ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களை விசாரிக்கவும், விரைவில் தண்டனைகளை வழங்கவும், தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது:
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணம், தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது, விரைவில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆட்சியில், சுய உதவி குழுக்கள் தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, வேலையில்லாத் திண்டாட்டம், தலைவிரித்து ஆடுகிறது. எனவே, இந்த ஆட்சி வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதால், திமுகவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை, என்றார்.
பின், வேளாண் சட்டத்திருத்த மசோதாவில் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று ஸ்டாலின் தெளிவாக சொல்ல வேண்டும் என்று முதல்வர் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த சட்டத்தால் பாதிப்பு இருப்பதால் தான் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள தமிழகத்தில் உள்ள விவசாயிகளை விட்டுக் கொடுத்து இருக்கிறார், முதல்வர் என்று குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து, வேளாண் சட்டத்திருத்த மசோதாவில் உள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி வருகிறார். இந்த சட்டத்தினால் அடிப்படையில் பொது விநியோகத் திட்டம் பாதிக்கும், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச விற்பனை விலை கிடைக்காது. விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட வற்புறுத்தப்படுவார்கள், இதனால் நீதிமன்றத்தில் சென்று விவசாயிகள் வழக்கு தொடர முடியாது, அதனால் இந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை தொடர்ந்து திமுக எதிர்த்து வருவதாக தெரிவித்தார்.