கோவை: வால்பாறையில் சமூக நலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்தினருக்கு பாதுகாப்பு நிதியாக ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 25,000 ரூபாய் வருங்கால வைப்பு நிதியாக 10 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு கலந்து கொண்டு ஐந்து தாய்மார்களுக்கு அதற்கான ஆணையை வழங்கினார்.
பின்னர் பேசிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, அம்மா அவர்கள் கொண்டுவந்த இந்தப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்படி இரண்டும் பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகின்றது எனவும் அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களும் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய வட்டாட்சியர் ராஜா, இத்திட்டத்தில் பயன்பெற இரண்டும் பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72,000 ரூபாயாக இருக்க வேண்டும். மேலும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின் குடும்ப அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வட்டாட்சியர் ராஜா வாசு, தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி அமீது, நகரச் செயலாளர் மயில் கணேசன், சலாவுதீன் எஸ்கேஎஸ் பாலு மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.