கோவை: உலக மண் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் மண்வள மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது.

மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்கு தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம். மண்ணின் வளத்தைப் பேணிப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கிய கடமையாகும். நாம் தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளோம்.
அதுமட்டுமின்றி, நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 8-10 மில்லியன் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மண்ணில் பற்றாக்குறையாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மண்ணிலிருந்து சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு ஊட்டச்சத்துக்களை திரும்ப மண்ணிற்கு அளித்தால்தான், அந்த மண் வளம் குன்றாததாகவும் அதிக பயிர் விளைச்சல் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

எனவே, மண்ணின் நலம் மற்றும் வளத்தைப் பேணுவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் “டிசம்பர் 5ம் நாள்” “உலகமண்” தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே உலக மண் தினத்தையொட்டி காரமடை வட்டம் கோபனாரி மலைவாழ் கிராமத்தில், “பழங்குடி விவசாயிகளுக்கும் - விஞ்ஞானிகளுக்கும் கலந்துரையாடல் மற்றும் மண்வள மேம்பாடு பயிற்சியும் நடத்தப்பட்டது.
இப்பயிற்சியானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் இயங்கி வரும் மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்புத்திறன் தொடர்பளவுத்திட்டம் மற்றும் ஐ.சி.ஏ.ஆர்- இந்திய மண்ணியல் நிறுவனம், போபால் ஆகியவற்றால் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் முனைவர் ப. மலர்விழி, பேராசிரியர் மற்றும் தலைவர், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை அவர்கள் மண்ணின் தன்மை, மண் உருவாதல் மற்றும் மண்வள பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாக முனைவர் சு. மரகதம் திட்ட பொறுப்பாளர் அவர்கள், கோபனாரி கிராம விவசாய நிலங்களின் மண்வளம் பற்றியும் மண் வளத்திற்கும் மகசூல் இலக்கிற்கும் ஏற்ப பயிர் சத்து மேலாண்மையை கடைப்பிடிப்பதால் மண்வளம் பாதுகாக்கப்படும் என்று எடுத்துரைத்தார்.
முனைவர் அர.சாந்தி இயக்குனர், (இயற்கைவள மேலாண்மை இயக்ககம்) அவர்கள் தலைமை உரையில் மண்வள அட்டையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கினார். மேலும் பல்வேறு தொழில்நுட்ப உத்திகள் மூலம் மண் வளத்தை பாதுகாப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
இப்பயிற்சியின் அங்கமாக மண்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் கருத்துக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மண் மற்றும் பாசன நீர் சேகரித்தல் பற்றி செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டன.