மூலப்பொருட்கள் விலை ஏற்றதால் தொழில் முடக்கம்: வரும் 15 ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவிப்பு..!

கோவை: மூலப்பொருட்கள் விலை ஏற்றதால் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், மதிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மூலப்பொருட்கள் விலை ஏற்றதால் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், மதிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த கோரிக்கைகளை, வலியுறுத்தி வரும் 15ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர். 



இது குறித்து, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர், ஜேம்ஸ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

சிறு, குறுந் தொழில் முனைவோர்கள் மூலப்பொருட்கள் விலை ஏற்றதால் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். ஸ்டீல் 25 சதவீதம், காப்பர் 30 சதவீதம், அலுமினியம் 17 சதவீதம் மற்ற பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட மூலப்பொருட்கள் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

திடீரென மூலப்பொருட்கள் விலை ஏற்றதால், ஏற்கனவே ஜாப் ஆர்டர்கள் பெற்றவர்கள் இதற்கு முன்னர் பேசிய விலைக்கே பொருட்களை உற்பத்தி செய்து தரமுடியவில்லை. இப்படி, எல்லா விதத்திலும் பாதிப்பு ஏற்படுள்ளது.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக சிறு, குறுந் தொழில்முனைவோர்கள் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுவதை போல, மூலப்பொருட்கள் விலையும் அதே போல் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஒரு ஆண்டுக்காவது மூலப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாது.

ஜி.எஸ்.டி., கொரோனா, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் மீண்டு வர சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி 5 சதவீதம் வரை மட்டுமே விதிக்கப்பட வேண்டும். ஸ்டீல் போன்ற மூலப்பொருட்கள் எளிதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.கிடைக்க, பீளமேடு பகுதியில் மேம்பால பணிக்காக மூடிய செயில் கிடங்கை உடனடியாக திறக்க வேண்டும். 

மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரைஸ் மானிடரிங் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். கோவையில் மூலப்பொருட்கள் வங்கி மீண்டும் திறக்கப்பட வேண்டும். மூலப்பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது கொசிமா, கவ்மா, காஸ்மா, டேக்ட், காஸ்மாபேன் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...