பாஜக ஆளாத மாநிலங்களில், வேளாண் சட்ட மசோதாவை ஆதரிக்கும் ஒரே முதல்லர் தமிழக முதல்வர் தான் - பொள்ளாச்சியில் திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

பொள்ளாச்சி: திமுகாவின் 'விடியலை நோக்கி' என்ற பிரச்சார பயணத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கோவை மாவட்டத்தில் துவக்கியுள்ளார்.

பொள்ளாச்சி: திமுகாவின் 'விடியலை நோக்கி' என்ற பிரச்சார பயணத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கோவை மாவட்டத்தில் துவக்கியுள்ளார். 



இன்று காலை, அவர் பொள்ளாச்சி அருகே உள்ள வளந்தாயமரம் கிராமத்தில், விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். அப்போது, விவசாயிகள் கூறும்போது, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் விடுபட்டுள்ள ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

என்று கோரிக்கை வைத்தனர். 

மேலும், தென்னை வாரியம் அமைக்க வேண்டும், இளநீருக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.



பின்னர், கூட்டத்தில் திமுகவின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேசும் போது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின் திட்டத்தை, அதிமுக ஆதரித்து கையெழுத்திட்டு உள்ளதால், இலவச மின்சார திட்டம் கேள்விகுறியாகியுள்ளது. இந்த அரசு தமிழ்நாட்டு மக்களுக்கும், அதிமுக கட்சிக்கும் துரோகம் செய்துள்ளது. இதனால், இலவச மின்சாரத்தை படிப்படியாக குறைக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். 

மேலும், 7,000 கோடி விவசாயக் கடனை ரத்து செய்து விவசாயிகள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றியது திமுக தான்..! அதே, திமுக தான் இன்று விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்த சட்டத்தினால் அடிதட்டு மக்களின் உணவு பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். எனவே, இந்த சட்டத்தை எதிர்த்து திமுக  குரல் கொடுக்கும் என்றும், மத்திய அரசு வழங்கும் விவசாயிகளின் உதவித்தொகையும் விவசாயிகள் என்ற பெயரைச் சொல்லி அதிமுகவினர் சுரண்டி வருவதாகவும், கனிமொழி குற்றம்  சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்களில், விவசாயிகளுக்கு எதிராக உள்ள சட்ட மசோதாவை ஆதரிக்கும் ஒரே முதல்லர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் சுய உதவி குழு திட்டங்கள், தற்போது செயலற்று உள்ளது, என்று கூறினார். ஊரடங்கு காலங்களில், வட்டி செலுத்த முடியாத மகளிருக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், அவர் புகார் தெரிவித்தார். 

ஐந்து மாத காலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விவசாயிகளின் பொது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும், என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...