கோவையில் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்தில் வரித்துறையினர் சோதனை..!

கோவை: கோவையில் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்தில் வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை: கோவையில் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்தில் வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வரி ஏய்ப்பு புகாரின்பேரில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்திலும், இன்று காலை 8 மணி முதல் 15 அதிகாரிகள் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த, அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து, சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஆவணங்கள் மற்றும் பணம் ஏறதேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வருமான வரித்துறையினர் தரப்பில் வெளியிடப்படவில்லை.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...