கோவை: கோவை ஆனைகட்டி சோதனைச்சாவடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மினி டெம்போ வேன் ஒன்று வந்தது உடனே அதிகாரிகள் அதிலிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அவர்கள், முன்னுக்குப்பின் முரணான பதில் அளிக்கவே சந்தேகமடைந்த அதிகாரிகள் டெம்போவில் சோதனை செய்தனர். அப்போது, அதில் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்று கொண்டிருப்பதும் தெரிந்தது.
அரிசி கடத்திய பாலக்காட்டைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 29), அன்னூரை சேர்ந்த பிரகாஷ் (26), ரமேஷ் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.