கருமத்தம்பட்டி பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. ரூ. 2 லட்சம் லஞ்சப் பணம் சிக்கியது. செயல் அதிகாரி மீது வழக்கு

கோவை: கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதல், ரூபாய் 2 லட்சம் லஞ்சப் பணம் சிக்கியது. இதுதொடர்பாக செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதல், ரூபாய் 2 லட்சம் லஞ்சப் பணம் சிக்கியது. இதுதொடர்பாக செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அதிகாரியாக இருப்பவர் செல்வராஜ் (வயது 52), கருமத்தம்பட்டி பேரூராட்சிகள், பொதுமக்களிடம் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.



இந்த நிலையில், போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பரிமளாதேவி, எழிலரசி மற்றும் போலீசார் நேற்று திடீரென்று கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு வந்து சோதனை நடத்தினர். அலுவலக கதவுகளை மூடிவிட்டு, வெளியில் யாரும் செல்லாத வகையில் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, செயல் அதிகாரி செல்வராஜின் அறையில் சோதனை நடத்திய போது, கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் பணத்துக்கு உரிய கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ரூபாய் 2 லட்சத்து 2 ஆயிரம் பணத்துக்கு உரிய கணக்கு விவரங்கள் காட்டப்படவில்லை. இதனால், அது லஞ்சப் பணமாக கருதப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், நடத்திய விசாரணையில் காளப்பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் தான், செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்ய செயல் அதிகாரியிடம் சான்றிதழ் பெறுவதற்காக வந்துள்ளார். அவரிடம், ரூபாய் 5 லட்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கொடுப்பதாக செயல் அதிகாரி கூறியுள்ளார். ஆனால், ரூபாய் 2 லட்சம் தருவதாக பவுன்ராஜ் கூறியுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, பவுன்ராஜ் ரூபாய் 2 லட்சத்தை செயல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் செயல் அதிகாரி சிக்கியது தெரியவந்தது. இதன் காரணமாக கருமத்தம்பட்டி பேரூராட்சி செயல் அதிகாரி செல்வராஜ், மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு சோதனையில் பேரூராட்சி செயல் அதிகாரி சிக்கியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...