கோவையில் வாகன விபத்தில் திருமணமான 10 நாளில் புது மாப்பிள்ளை பரிதாப சாவு

கோவை: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில், தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் அவரது அக்காள் கிருஷ்ணவேணி (வயது 37), இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.


கோவை: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரது மகன் முத்து மணிகண்டன் (26), இவர் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் ஆகிய நிலையில் தனது மனைவியுடன் சுந்தராபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். இந்நிலையில், நேற்று இரவு முத்து மணிகண்டன், அதே தனியார் ஆஸ்பத்திரியில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் வேலை பார்க்கும் தனது நண்பரான முஸ்தக் செரிப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில், மதுக்கரையில் இருந்து சுந்தராபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முஸ்தக், மணிகண்டன் வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட முத்து மணிகண்டன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கிருந்தவர்கள், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து முஸ்தக் செரிப் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மதுரையைச் சேர்ந்த பிரவீன் விஷ்ணுபிரசாத் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி பத்து நாட்களே ஆன நிலையில், புது மாப்பிள்ளையான ஆம்புலன்ஸ் டிரைவர், வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...