நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 82.27 லட்சம் மோசடி கைதான அக்கா, தம்பிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை. கோவை நீதிமன்றம் தீர்ப்பு..!

கோவை: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில், தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் அவரது அக்காள் கிருஷ்ணவேணி (வயது 37), இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.


கோவை: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில், தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் அவரது அக்காள் கிருஷ்ணவேணி (வயது 37), இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.

அப்போது, தங்கள் நிறுவனத்தின் முதலீடு செய்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 12 ஆயிரம் வட்டி தருவதாக கூறி உள்ளனர். மேலும், தாங்கள் செலுத்தும் பணத்தை ஒரு வருடத்தில் திருப்பித் தந்து விடுவதாகவும் கூறி உள்ளனர். இதை நம்பி, பலர் அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை கொடுத்து உள்ளனர்.

ஆனால், பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இப்படி 39 பேரிடம் பணத்தை பெற்று ரூபாய் 82 லட்சத்து 27 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார், கிருஷ்ணவேணியை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நீதிமன்றத்தில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பதிவாகும், நிதி நிறுவன மோசடிகளை விசாரித்து வருகிறது.

அதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த, நீதிபதி ரவி மோசடிகளில் ஈடுபட்ட நந்தகுமார் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 40 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...