கோவையில் தற்கொலைக்கு முயன்ற மனநோயாளியை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு எஸ்.பி பாராட்டு..! செல் ஃபோன் டவர் மீது ஏறியதால் பரபரப்பு

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தீடீர் என்று செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தீடீர் என்று செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பொழுது, போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர் கவனத்தை திசை திருப்பி, அவரை பாதுகாப்புடன் தரை இறக்கி காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு எஸ்பி அருளரசு நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கோவை, ஒண்டிபுதூரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வீரபாண்டி பிரிவில் உள்ள அவரது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். அவர், கடந்த ஒரு வருட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நேற்று இரவு சுமார் 12.15 மணிக்கு செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இது சம்மந்தமாக, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடம் சென்று பிரேம்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



எவ்வளவு பேசியும், பிரேம்குமார் கீழே இறங்க மறுத்துவிட்டதால், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பெரியசாமி (10974) நந்தகுமார் (10897) ஆகியோர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி பிரேம்குமாரை பத்திரமாக மீட்டனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



பெ.நா.பாளையம், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் நற்செயலை பாராட்டி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு, சாமர்த்தியமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களை நேரில் சென்று நற்பணிச்சான்று வழங்கி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...