கோவை வனத்துறை மற்றும் ஆக்ட் பார் பட்டர்பிலைஸ் அமைப்பு சார்பில் 3வது ஆண்டு பறவைகள், பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு!

கோவை: கோவை வனத்துறை மற்றும் ஆக்ட் பார் பட்டர்பிலைஸ் அமைப்பு இணைந்து 3வது ஆண்டு பறவைகள், பட்டாம்பூச்சிகள், தட்டான்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் கணக்கெடுப்பை 2020 டிசம்பர் 4 மற்றும் 6ம் தேதிகளில் நடத்தியது.



கோவை: கோவை வனத்துறை மற்றும் ஆக்ட் பார் பட்டர்பிலைஸ் அமைப்பு இணைந்து 3வது ஆண்டு பறவைகள், பட்டாம்பூச்சிகள், தட்டான்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் கணக்கெடுப்பை 2020 டிசம்பர் 4 மற்றும் 6ம் தேதிகளில் நடத்தியது.

இந்த கணக்கெடுப்பை கோயம்புத்தூர் டி.எஃப்.ஓ டி.வெங்கடேஷ் ஐ.எஃப்.எஸ் அவர்கள் தொடக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக முனைவர் சஞ்சய் மோலூர், நிர்வாக இயக்குனர், ஜூ அவுட்ரீச் நிறுவனம் பங்கு கொண்டு சிறப்புரையாற்றினார்.



அனுபவம் வாய்ந்த பறவை நிபுணர்கள், பட்டாம்பூச்சி வல்லுநர்கள், தட்டான்பூச்சி வல்லுநர்கள் ஒரு நாள் முழுவதும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான்பூச்சி கண்டுபிடிப்பது, அடையாளம் காண்பது, புகைப்படம் எடுப்பது, பல உயிரினங்களைப் பதிவு செய்யும் முயற்சியில் 50 தன்னார்வலர்கள் மற்றும் வன அதிகாரிகள் பங்கேற்று மொத்தம் 666 உயிரினங்களை இனங்கள் பதிவு செய்தனர்.

இவற்றில் 175 வகையான பறவைகள், 125 வகையான பட்டாம்பூச்சிகள், 21 வகையான தட்டான்பூச்சி மற்றும் 345 வகையான அந்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டன. இந்த கணக்கெடுப்பு 5ம் தேதி 7 வனச்சரகத்திலும், 8 முகாம்களுடன் தொடங்கப்பட்டு 2020 டிசம்பர் 6ம் தேதி முடிவடைந்தது.

கோவை குற்றாலம், சிறுமுகை, மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் குஞ்சபனை ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பறவைகளில் கண்டுபிடிப்புகள் - ஜங்கிள் ஆவ்லெட், இருவாட்சி பறவை மூன்று வனசாரகத்தில் காணப்பட்டது.

காட்டு ஆந்தை இந்தியாவில் அழிந்து வரும் முதல் பத்து பறவைகள் வரிசையில் இருப்பதால் அதன் வாழ்விடங்களான காடுகளையும் காட்டை ஒட்டியுள்ள பகுதிகளையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. பட்டாம்பூச்சிகள் - ஆரஞ்சு-வால் ஆவ்ல், டிராகன்ஃபிளைஸ் - ப்ளூ டார்னர், நீலகிரி டோரண்ட் டார்ட் மற்றும் எம்பெரர் அந்துப்பூச்சி மற்றும் அரிதான அந்துப்பூச்சிகள் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டன.



அதிக எண்ணிக்கையில் 96 வகை பறவைகள் மற்றும் 70 வகை பட்டாம்பூச்சி இனங்கள் காரமடை பகுதியிலும் மற்றும் 249 வகை அந்துப்பூச்சிகளின் அதிகபட்ச எண்ணிக்கை மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்துப்பூச்சிகளின் பல புதிய வகைகளும் கண்டறியப்பட்டுள்ளன மற்றும் முந்தைய ஆய்வில் எங்கள் குழு சங்கரராமன் இரண்டு புதிய வகை பூச்சிகளை கோவைக்குற்றாலம் பகுதியிலிருந்து கண்டறிந்துள்ளார் அவற்றில் ஒன்றிற்கு சிறுவாணி என பெயரிடப்பட்டுள்ளது.

1. _உப்ரந்தா சிறுவாணி_ - பழ ஈ

2. _ஓமியோமார் ஹயாதி_ முட்டை ஒட்டுண்ணி - விவசாயத்திற்கு நன்மை செய்யும் பூச்சி

யூப்ராந்தா சிறுவாணி, டெஃப்ரிடிடே https://en.m.wikipedia.org/wiki/Tephritidae

ஓமியோமார் ஹயாட்டி, மைமரிடே https://en.m.wikipedia.org/wiki/Fairyfly

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...