கோவை கிணத்துக்கடவு அருகே சமையல் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் சாய்ந்து விபத்து!

கோவை: கோவை கிணத்துக்கடவு மின் நிலையம் முன்பு சமையல் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் சாய்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், லாரியை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு மின் நிலையம் முன்பு சமையல் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் சாய்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், லாரியை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமையல் எரிவாயு நிரப்பும் இடத்திலிருந்து லாரி மூலம் 200க்கும் மேற்பட்ட சமையல் சிலிண்டர் உடன் லாரி ஒன்று கோவை நோக்கி இன்று மதியம் வந்து கொண்டிருந்தது.



அப்போது, கிணத்துக்கடவு மின் நிலையம் அருகே வந்தபோது திடீரென லாரி சாலையோரத்தில் இருந்த குழியில் இறங்கி சாய்ந்தது.



சிலின்டருடன் சாய்ந்த லாரி அருகில் இருந்த வீட்டின் மீதும் சாய்ந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.



பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பளு தூக்கும் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...