கோவை மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ கடன் மேளா!

கோவை: கோவையில் சிறுபான்மையினர் மக்களுக்கான டாம்கோ கடன் மேளா இன்று ஆனைமலை தாலுகா பொள்ளாச்சி ஆனைமலை மெயின் ரோட்டில் செயல்படும் ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது.


கோவை: கோவையில் சிறுபான்மையினர் மக்களுக்கான டாம்கோ கடன் மேளா இன்று ஆனைமலை தாலுகா பொள்ளாச்சி ஆனைமலை மெயின் ரோட்டில் செயல்படும் ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது.

இந்நிலையில், நாளை 9ம் தேதி மதுக்கரை தாலுகா குனியமுத்தூர் பால்பண்ணை வீதியில் செயல்படும் குனியமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பொள்ளாச்சியில் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் செயல்படும் பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் செயல்படும் கோவை நகர கூட்டுறவு வங்கி தலைமையகத்திலும் நடக்கிறது.

அதேபோல, நாளை மறுநாள் 10-ம் தேதி மேட்டுப்பாளையம் தாலுகா மேட்டுப்பாளையம் ரோடு குமாரபுரத்தில் செயல்படும் மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 11ம் தேதி அன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் செயல்படும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் போத்தனூர் கிளையிலும், கிணத்துக்கடவு தாலுகா கிணத்துக்கடவு பொள்ளாச்சி ரோடு சர்வோதய சங்கக் கட்டிடம் முதல் மாடியில் செயல்படும் பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கியின் கிணத்துக்கடவு கிளையிலும், மேட்டுப்பாளையம் தாலுகா ஊட்டி மெயின் ரோட்டில் செயல்படும் மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கியின் தலைமை இடத்திலும் மதியம் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது.

எனவே, இந்த வாய்ப்பினை சிறுபான்மை மக்கள் தவறாது பயன்படுத்தி பயன்பெற வேண்டுமாய் கோவை மண்டல இணைப்பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...