கோவை: கள் இறக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வந்த கனிமொழி எம்.பியிடம் கோவை நாடார் சங்க பொதுச்செயலாளர் இருதயராஜ் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:- நாடார் சமுதாய மக்களில் சிலர் இன்னும் மரம் ஏறுவதை முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள். பெரும்பாலான பனை மற்றும் தென்னை மரங்கள் அழிந்து விட்டன.
அதேபோல, குறைந்த அளவில் காணப்படும் பனை மற்றும் தென்னை மரங்களை பாதுகாக்கவும் பனை தென்னை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யவும் தனி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரமேறும் தொழிலை ஆதாரமாகக் கொண்டு வாழும் நாடார் சமுதாய மக்கள் பொருளாதார வசதி இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
எனவே, அவர்களின் வருமானத்தைப் பெருக்க தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும் அதை விற்பனை செய்யவும் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நாடார் சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் நாடார் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.