கோவை: கோவை சூலூர் அருகே மதுபோதைக்கு அடிமையான கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பத்மாவதி வயது (50), இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
இந்நிலையில், கணவனும் மனைவியும் மட்டும் அங்கு தனியாக வசித்து வந்தனர். கணவன் மனைவி இரண்டு பேரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள். தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து சம்பளம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து வீட்டில் வைத்து ஒன்றாக மது அருந்தினர். அப்போது, அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மனைவியை கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தினார். பலத்த காயம் அடைந்த பத்மாவதி மயங்கி கீழே விழுந்தார். ஆனால், மனைவி தூங்கி விட்டார் என நினைத்து ஆறுமுகம் அவரது அறைக்கு சென்று படுத்து உறங்கிவிட்டார்.
பின்னர், மறுநாள் காலை ஆறுமுகத்தின் மகன் பெற்றோரை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது, அறையில் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பதாக தந்தையையும் தாயையும் எழுப்பினார். ஆறுமுகம் எழுந்து விட்டார். ஆனால், பத்மாவதி எழுந்திருக்காமல் அப்படியே படுத்துக் கிடந்தார்.
இதனால் சந்தேகமடைந்த ஆறுமுகத்தின் மகன் பத்மாவதியை அருகே சென்று பார்த்தார். அப்போது, அவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இது குறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பத்மாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆறுமுகத்தை 302 சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.