நீலகிரி: கூடலூர் அடுத்துள்ள ஒடக்கொல்லி கிராமத்தில் யானை தாக்கியதில் இன்று விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி ஒடக்கொல்லி கிராமத்தைச் சேர்ந்த மணி (52), இவர் தனது காப்பித் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த காட்டு யானை மணியை தாக்கி மிதித்ததில் உடல் சிதைந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், கூடலூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.