கோவை: வால்பாறையில் விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய எதிர்கட்சியினர் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வால்பாறை நகராட்சி அலுவலகம் முன் காங்கிரஸ், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகளுக்கு எதிராக. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விவசாய சட்டம் மூன்றையும் வாபஸ் வாங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 37 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் சதீஷ் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.