கோவை: முதல்வர் குறித்தும் அதிமுக கட்சி குறித்து தேவையில்லாத குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசினால் கோவைக்குள் நடமாட விடமாட்டோம் என அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக தலைவர் ஸ்டாலினும் ஆ.ராசாவும் மிகவும் கீழ்த்தரமாகப் பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்க ஆ.ராசாவிற்கு தகுதியில்லை எனவும் 2 ஜி வழக்கில் சிறை சென்ற ஊழல் குற்றவாளி ஆ.ராசா எனவும் கூறினார். அதிமுகவை தேவையில்லாமல் குற்றம் சுமத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இது போல் பேசினால், கோவைக்குள் அவரை நடமாட விடமாட்டோம் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேபோல, ஜெயலலிதா மறையும் போது விடுதலை பெற்று குற்றமற்றவராக நிரபராதியாக இருந்தார் எனவும் சட்டபடி மறைந்தவர் மீது வழக்கு தொடர முடியாது, இது கூட வழக்கறிஞரான ஆ.ராசவுக்கு தெரியாதா எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதம் செய்ய ஆ.ராசாவிற்கு தகுதியில்லை எனவும் ஆ.ராசாவுடன் விவதாதிக்க அதிமுகபினர் தயாராக இருப்பதாக கூறிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பினார். 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வரை எதிர்த்து போட்டியிட ஸ்டாலின் அஞ்சுவதாகவும் பொய்யான புகார்களை சொல்லி வருவதக தெரிவித்தார்.
அதிமுக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் எனவும் அது செல்லும் போது பிளாட் பாரத்தில் நிற்கும் போதும் யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் அதில் ஏறிக்கொள்ளலாம். இல்லையென்றால் பிளாட்பாரத்தில் தான் நிற்க வேண்டும் என்றார். அதிமுகவிற்கு பொது எதிரி திமுக எனவும் அவர்களை வீழ்த்த எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தயார் எனவும் கூறினார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் தீண்டதாகதவரும் அல்ல, வேண்டாதவரும் அல்ல என்றவர், திமுகவை வீழ்த்த நடிகர் ரஜினிகாந்த் எங்களுடன் சேர்ந்தால் ஏற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.